Posts

Showing posts from June, 2024

தீவிரவியாதி

தீதையும் , நன்றையும் பகுத்தறிவதால் நான் பகுத்தறிவாதி அயலானிடமும் அன்பு பாராட்ட அறிவதால் நான் கிறித்துவன் தேவன் ஒருவனே என ஓதுவதால் நான் இசுலாமியன் உண்மையை உணர என்னுள்ளே தேடுவதால் நான் இந்து குருநாதர் சொல்வழி செல்வதால் நான் சீக்கியன் ஆசைகளை வென்றிட விழைவதால் நான் பௌத்தன் அகிம்சையை நேசிப்பதால் நான் சமணன் . இருப்பினும் கேள்வி ஒன்று இருக்கிறது எனக்கு - அனைத்தும் இப்படி நம்முள்ளே இருக்க , நான் "இவன்" , நீ "அவன்" என பிரிக்க , குண்டுகள் வெடிக்க , அவன் யார் ? - புதுயுகன்

தட்டையாகித் தளர்வதோ தலைமுறை?

  நன்றாகத் தானே இருந்தார் இப்போது என்ன ஆயிற்று ?   ' தமிழன் ' என்பவர் பற்றி பேச்சு வந்ததும் தள்ளாட்டம் துள்ளாட்டம் போட அவரே வந்தார் .   ‘ பராக் ’ ‘ பராக் ’ என்று முன்காலத்தில் வந்தவர் பராக்கு பார்த்தபடி இப்போது  வருகிறார் !   ‘ பக்கத்து வீட்டுக்காரர் நல்ல புத்தகம் படிக்கிறார் , மேல் வீட்டுக்காரர் நல்ல வியாபாரம் பண்ணுகிறார் இவர் மட்டும் ...அடக் கடவுளே.. ' தலையில் அடித்தனர் பார்த்து நின்றவர் .   விழுந்த வேட்டியை வளைத்துப் பிடித்து போதை வழியச் சிரித்தார்   கல்யாணம் என்றால் போதை .. கருமாதி என்றால் போதை .. மேடையில் குடி … வீட்டில் குடி … வேலைக்கு வந்தால் குடி .. ஓட்டுக்குக் குடி பேச்செல்லாம் குடியைப் பற்றியே தான் !   ‘ பொழுதுபோக்குக் குடிப்பார்கள் பொழுதெல்லாமா குடிப்பார்கள் ?’   ‘ என் கடவுள் குடி தான் ! நான் அதையே வணங்குகிறேன் ! நான் இந்தக் குடியின் விசிறி !’ என்று வழிபாடு நடத்தினார் .   ‘ ஆளுமையே குடி தான் என்றால் எல்லைகள் என்று விரிவுபடும் ?’   விக்கலோடு...