மாயா யதார்த்தம் - ஒரு சிறிய அறிமுகம்
இலக்கியங்களை வகைப் படுத்துதல் எழுத்தாளனை மட்டுமல்ல, வாசகனை, வாசிப்பு அனுபவத்தை வகை படுத்துவதற்காகவும் தான். மாயா யதார்த்தத்தின் சிறப்பு என்னவெனில் நம் அனைவரின் வாழ்விலும் நிகழும் ஒரு விஷயமாக, அந்தரங்கமான உணர்வுகளை தொடும் அனுபவமாக விளங்குவது தான். யதார்த்தமான ஒரு கதைக்குள், யதார்த்தம் கடந்த விந்தையான சங்கதிகள் வருவது மாயா யதார்த்த கதைகளின் லட்சணம். இந்த வகை கதைகளை பற்றி இன்னும் அறிய விரும்புகிறவர்கள் பின்வரும் இணைப்புகளில் எனது பகிர்வில் கேட்கலாம்; http://www.youtube.com/watch?v=SpbrMjaukTQ&feature=player_embedded http://www.youtube.com/watch?v=UFxfVt_sczg&feature=player_embedded இந்த இலக்கிய வகை அறிவியல் கதைகளின் இறுக்கத்தை, கட்டாயங்களை தளர்த்தி விடுகின்றன. வினோத கதை போல் எந்த கட்டாயங்களும் இல்லாத வெறும் அதீத கற்பனையும் அல்ல. இவை ஒரு மனிதனின் விந்தையான அனுபவத்தை குறிப்பவை. அந்த அனுபவம் ஏற்படாதவருக்கு விந்தை. அனுபவம் ஏற்பட்டவருக்கு யதார்த்தம். ஒவ்வொரு தனி மனிதனும் சமூகத்தின் ஒரு பகுதி என்றால், எல்லா மனிதர்களின் அனுபவ தொகுதி தான் ஒரு சமூகத்தின் அனுபவம். அ...