‘முத்தமிழ் வெளியில் முருகனின் முக்காலத் தடம்’ செம்மொழி மாநாட்டின் ஆய்வு போல இன்று, ‘முத்தமிழ் முருகன் மாநாட்டில்’ வாரியார் சுவாமிகள் அரங்கில், மாலை எனது மேற்கண்ட ஆய்வு வெளியாகிறது. சமூகத்தில் நிலவும் நம்பிக்கைளும், கூட்டு விழுமியங்களும் அச்சமுகத்தின் நீண்ட நாள் பதிவுகளின் பால் அமைவுறுகின்றன. காட்டாக, குழந்தை ஏசுவின் ஓவியத்தை விடவும் சிலுவையில் அறையப்பட்ட ஏசுபிரானின் ஓவியமே அதிகம் காணப்படுவது, கொடைக்கான நன்றி அறிவித்தலைச் சிறப்பாகச் செலுத்துதலையே முதன்மை மாண்பாக அச்சமூகம் கருத்துதலைக் காட்டுகிறது. அது போல, தமிழ்ச் சமூகங்களின் மாறிலிப் பதிவு, முருகப்பதிவு. அப்பதிவின் வழி முத்தமிழின் நிலையையும், தமிழ்ச் சமூகத்தின் வாழ்வியலையும் அலசுகிறது இவ்வாய்வு.
Posts
Showing posts from August, 2024