Posts

Showing posts from 2022

தேசியத் தமிழ்

Image
ஆளுங்கட்சி   வேறு ;  தேசபக்தி   வேறு   இந்த   அடிப்படை   அறிவு   அற்றவரை   மேடை   ஏற்றாதே தமிழகமே மாநிலங்களின்   கூட்டமைப்பே   என்றாலும் அமெரிக்கா   ஒன்றே ; அதன்   தேசபக்தியை   மறவாதே தமிழகமே இந்தியக்   கடவுச்சீட்டில்   வாழ்ந்து பிற   தேசக்   கூலிகளாக பிழைப்போட்டும்   சிறியார்களை இனம்   கண்டுகொள்   எம் தமிழகமே பசும்பொன்   முத்துராமலிங்கனார் காயிதே   மில்லத் அப்துல்   கலாம் சீனிவாச   இராமானுசன் இவர்களை   மறவாதே தமிழகமே இந்தியத்   துணைக்கண்டம்   முழுதும் ஆயிரம்   ஆயிரம்   ஆண்டுகளாய் பல்கிப்   பரவி   பண்பாட்டுக்   கொடை   ஈந்த உரிமைக்கார   இந்தியர்   யாம் ; இதை   மறந்தும்   மறக்காதே தமிழகமே பிரிவினையாளரின்   நோக்கம்   அறி ; அவர்   கருத்தியலை   அரி ; எடை   போட்டே நடை   போடு தமிழகமே பாரதியும்   வவுசியும் பைத்தியங்கள்   அல்ல   என்பதை அவரது   இரத்தக்   க...