எளிமை சூழ் எழில்கள்
நூல்: ‘எப்போதும் போல் இல்லை எப்போதும்’ (வெளியீடு: வானதி பதிப்பகம்) நூலாசிரியர் : கவிஞர் ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன் விமர்சனம் : கவிஞர் புதுயுகன் எளிமை சூழ் எழில்கள் “ நமக்குத் தொழில் கவிதை நாட்டிற் குழைத்தல் இமைப் பொழுதுஞ் சோரா திருத்தல்…” பாரதியாரின் இந்தப் பதவிப் பிரமாணத்தை அடியொற்றி அணிதிரண்டது கவிஞர் பட்டாளம். அதில் தனக்கானதொரு தனித்த அடையாளத்தை ஏற்று தொடர்ந்து இயங்கி வருகிற கவிஞர் திரு . ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன் அவர்கள் . ‘எப்போதும் போல் இல்லை எப்போதும்’ என்ற தலைப்பில் அவர் எழுதி வானதி பதிப்பகம் வெளியிட்டிருக்கும் கவிதை நூல் அந்த அடையாளத்தின் சமீபச் செதுக்கல். தான் சாதாரணன் என்று இயல்புக் கட்டத்தில் துவங்கி நாள்படகொள்கை சிதையாது , தொடர்ந்து இயங்குதல் சமூக நலன் காக்கும் ஒரு வளம். அந்த வளத்தில் தேர்ந் து மலர்களாக கவிதைகளை இந்த நூலில் பூக்கச் செய்திருக்கிறார் கவிஞர் . அதனால் சாரலில் நனைந்து...