தீவிரவியாதி

தீதையும், நன்றையும் பகுத்தறிவதால்
நான் பகுத்தறிவாதி


அயலானிடமும் அன்பு பாராட்ட அறிவதால்

நான் கிறித்துவன்


தேவன் ஒருவனே என ஓதுவதால்
நான் இசுலாமியன்


உண்மையை உணர என்னுள்ளே தேடுவதால்

நான் இந்து


குருநாதர் சொல்வழி செல்வதால்
நான் சீக்கியன்


ஆசைகளை வென்றிட விழைவதால்
நான் பௌத்தன்


அகிம்சையை நேசிப்பதால்
நான் சமணன்.

இருப்பினும் கேள்வி ஒன்று இருக்கிறது எனக்கு

- அனைத்தும் இப்படி நம்முள்ளே இருக்க,

நான் "இவன்", நீ "அவன்" என பிரிக்க,
குண்டுகள் வெடிக்க, அவன் யார்?

- புதுயுகன்

Comments

Popular posts from this blog

மாயா யதார்த்தம் - ஒரு சிறிய அறிமுகம்

A question to God – why did you create us?