‘முத்தமிழ் வெளியில் முருகனின் முக்காலத் தடம்’ செம்மொழி மாநாட்டின் ஆய்வு போல இன்று, ‘முத்தமிழ் முருகன் மாநாட்டில்’ வாரியார் சுவாமிகள் அரங்கில், மாலை எனது மேற்கண்ட ஆய்வு வெளியாகிறது. சமூகத்தில் நிலவும் நம்பிக்கைளும், கூட்டு விழுமியங்களும் அச்சமுகத்தின் நீண்ட நாள் பதிவுகளின் பால் அமைவுறுகின்றன. காட்டாக, குழந்தை ஏசுவின் ஓவியத்தை விடவும் சிலுவையில் அறையப்பட்ட ஏசுபிரானின் ஓவியமே அதிகம் காணப்படுவது, கொடைக்கான நன்றி அறிவித்தலைச் சிறப்பாகச் செலுத்துதலையே முதன்மை மாண்பாக அச்சமூகம் கருத்துதலைக் காட்டுகிறது. அது போல, தமிழ்ச் சமூகங்களின் மாறிலிப் பதிவு, முருகப்பதிவு. அப்பதிவின் வழி முத்தமிழின் நிலையையும், தமிழ்ச் சமூகத்தின் வாழ்வியலையும் அலசுகிறது இவ்வாய்வு.
Posts
தீவிரவியாதி
- Get link
- X
- Other Apps
தீதையும் , நன்றையும் பகுத்தறிவதால் நான் பகுத்தறிவாதி அயலானிடமும் அன்பு பாராட்ட அறிவதால் நான் கிறித்துவன் தேவன் ஒருவனே என ஓதுவதால் நான் இசுலாமியன் உண்மையை உணர என்னுள்ளே தேடுவதால் நான் இந்து குருநாதர் சொல்வழி செல்வதால் நான் சீக்கியன் ஆசைகளை வென்றிட விழைவதால் நான் பௌத்தன் அகிம்சையை நேசிப்பதால் நான் சமணன் . இருப்பினும் கேள்வி ஒன்று இருக்கிறது எனக்கு - அனைத்தும் இப்படி நம்முள்ளே இருக்க , நான் "இவன்" , நீ "அவன்" என பிரிக்க , குண்டுகள் வெடிக்க , அவன் யார் ? - புதுயுகன்
தட்டையாகித் தளர்வதோ தலைமுறை?
- Get link
- X
- Other Apps
நன்றாகத் தானே இருந்தார் இப்போது என்ன ஆயிற்று ? ' தமிழன் ' என்பவர் பற்றி பேச்சு வந்ததும் தள்ளாட்டம் துள்ளாட்டம் போட அவரே வந்தார் . ‘ பராக் ’ ‘ பராக் ’ என்று முன்காலத்தில் வந்தவர் பராக்கு பார்த்தபடி இப்போது வருகிறார் ! ‘ பக்கத்து வீட்டுக்காரர் நல்ல புத்தகம் படிக்கிறார் , மேல் வீட்டுக்காரர் நல்ல வியாபாரம் பண்ணுகிறார் இவர் மட்டும் ...அடக் கடவுளே.. ' தலையில் அடித்தனர் பார்த்து நின்றவர் . விழுந்த வேட்டியை வளைத்துப் பிடித்து போதை வழியச் சிரித்தார் கல்யாணம் என்றால் போதை .. கருமாதி என்றால் போதை .. மேடையில் குடி … வீட்டில் குடி … வேலைக்கு வந்தால் குடி .. ஓட்டுக்குக் குடி பேச்செல்லாம் குடியைப் பற்றியே தான் ! ‘ பொழுதுபோக்குக் குடிப்பார்கள் பொழுதெல்லாமா குடிப்பார்கள் ?’ ‘ என் கடவுள் குடி தான் ! நான் அதையே வணங்குகிறேன் ! நான் இந்தக் குடியின் விசிறி !’ என்று வழிபாடு நடத்தினார் . ‘ ஆளுமையே குடி தான் என்றால் எல்லைகள் என்று விரிவுபடும் ?’ விக்கலோடு விக்கித்து நின்று சற்றே சிந்தித்தார் ;
தேசியத் தமிழ்
- Get link
- X
- Other Apps
ஆளுங்கட்சி வேறு ; தேசபக்தி வேறு இந்த அடிப்படை அறிவு அற்றவரை மேடை ஏற்றாதே தமிழகமே மாநிலங்களின் கூட்டமைப்பே என்றாலும் அமெரிக்கா ஒன்றே ; அதன் தேசபக்தியை மறவாதே தமிழகமே இந்தியக் கடவுச்சீட்டில் வாழ்ந்து பிற தேசக் கூலிகளாக பிழைப்போட்டும் சிறியார்களை இனம் கண்டுகொள் எம் தமிழகமே பசும்பொன் முத்துராமலிங்கனார் காயிதே மில்லத் அப்துல் கலாம் சீனிவாச இராமானுசன் இவர்களை மறவாதே தமிழகமே இந்தியத் துணைக்கண்டம் முழுதும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய் பல்கிப் பரவி பண்பாட்டுக் கொடை ஈந்த உரிமைக்கார இந்தியர் யாம் ; இதை மறந்தும் மறக்காதே தமிழகமே பிரிவினையாளரின் நோக்கம் அறி ; அவர் கருத்தியலை அரி ; எடை போட்டே நடை போடு தமிழகமே பாரதியும் வவுசியும் பைத்தியங்கள் அல்ல என்பதை அவரது இரத்தக் கொடை பெற்றதாலே புரிந்து கொள் தமிழகமே உலக அரங்கில் நீ இந்தியன் ; உள்ளூர் உளரல்களை உதைத்தே புறந்தள்ளி ஓட விடு அறிவார்ந்த எம் தமிழகமே 75 ஆம் இந்திய விடுதலை நாள் நல்வாழ்த்துகள் ! - புதுயுகன்
எளிமை சூழ் எழில்கள்
- Get link
- X
- Other Apps
நூல்: ‘எப்போதும் போல் இல்லை எப்போதும்’ (வெளியீடு: வானதி பதிப்பகம்) நூலாசிரியர் : கவிஞர் ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன் விமர்சனம் : கவிஞர் புதுயுகன் எளிமை சூழ் எழில்கள் “ நமக்குத் தொழில் கவிதை நாட்டிற் குழைத்தல் இமைப் பொழுதுஞ் சோரா திருத்தல்…” பாரதியாரின் இந்தப் பதவிப் பிரமாணத்தை அடியொற்றி அணிதிரண்டது கவிஞர் பட்டாளம். அதில் தனக்கானதொரு தனித்த அடையாளத்தை ஏற்று தொடர்ந்து இயங்கி வருகிற கவிஞர் திரு . ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன் அவர்கள் . ‘எப்போதும் போல் இல்லை எப்போதும்’ என்ற தலைப்பில் அவர் எழுதி வானதி பதிப்பகம் வெளியிட்டிருக்கும் கவிதை நூல் அந்த அடையாளத்தின் சமீபச் செதுக்கல். தான் சாதாரணன் என்று இயல்புக் கட்டத்தில் துவங்கி நாள்படகொள்கை சிதையாது , தொடர்ந்து இயங்குதல் சமூக நலன் காக்கும் ஒரு வளம். அந்த வளத்தில் தேர்ந் து மலர்களாக கவிதைகளை இந்த நூலில் பூக்கச் செய்திருக்கிறார் கவிஞர் . அதனால் சாரலில் நனைந்து கொண்டே ஒரு பூங்காவில் நடக்கிற உணர்வைத் தந்து விடுகிறது இந்த நூல். கவிஞனாக இருப்பதைத் தான் கௌரவமாகக்